அரசுத்  துறைகள் முடக்கத்தை நீக்க ட்ரம்ப் சமாதான முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 11:23 am
trump-offers-compromise-to-end-government-shutdown

அமெரிக்காவில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்துவரும் அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்கு வரும் நோக்கில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமாதான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, சிறுவயதிலேயே தங்களது பெற்றோர்களுடன் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை மீண்டும் அவர்களது தாய்நாடுகளுக்கே திரும்பி அனுப்பும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது. இவர்கள் மேலும் மூன்றாண்டுகளுக்கு அமெரிக்காவிலேயே தங்கி வேலை பார்க்கலாம்.

இதேபோன்று, உள்நாட்டு போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் தங்களது நாட்டை விட்டு அமெரிக்காவில் குடியேறிய லட்சக்கணக்கானோரும் மேலும் மூன்றாண்டுகள் இங்கிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளையடுத்து, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க, ட்ரம்ப் தலைமையிலான அரசு கோரியுள்ள நிதிக்கான ஒப்புதலை  அமெரிக்க நாடாளுமன்ற மேலவை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close