அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசக்கூடும்- வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Jan, 2019 01:24 pm
united-states-will-be-hit-by-severe-snowfall-meteorological-center-warns

அமெரிக்காவில் அடுத்து சில நாட்களில் கடுமையான பனிப்புயல் வீசக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் நிலவிய மிதமான பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் எதிரொலியாக வார விடுமுறை நாட்களில் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.

மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு அமெரிக்காவில் பனிப் புயலும், அதனை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிகாகோவில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. தொடரும் பனிப்பொழிவால் நகரில் உள்ள 2 முக்கிய விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close