அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் அறிவுரை

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Jan, 2019 02:05 pm
american-president-advice-to-the-public

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசக்கூடும் என்ற தகவலையடுத்து பொதுமக்கள் பத்திரமாக இருக்குமாறு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்து சில நாட்களில் கடுமையான பனிப்புயல் வீசக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் நிலவிய மிதமான பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் எதிரொலியாக வார விடுமுறை நாட்களில் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்காவில் பெரும்பகுதி பனிப்புயலால் தாக்கப்படக் கூடும் என்ற தகவலையடுத்து பொதுமக்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டு உள்ளார்.  இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலக வெப்பமயமாதலால் தற்போது இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close