அவசரநிலை பிரகடனத்துக்கு தயாராகும் வெள்ளை மாளிகை!

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 10:38 am
white-house-preparing-draft-national-emergency-order

தென் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்த, வெள்ளை மாளிகை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க, அமெரிக்கா -மெக்ஸிகோ எல்லைப் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதற்கான நிதியை ஒதுக்க, அமெரிக்க நாடாளுமன்ற மேலவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த  ட்ரம்ப், அரசுத் துறைகளை முடக்க  உத்தரவிட்டார். இந்த உத்தரவு அமலுக்கு வந்து 35 நாள்களுக்கு மேலான போதும்,  இப்பிரச்னை முடிவுக்கு வருவதாக  தெரியவில்லை.

இதையடுத்து,  தென் அமெரிக்க எல்லைப் பகுதிகளில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கான வரைவுகளை தயாரிக்கும் பணிகளும் வெள்ளை மாளிகையில் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டால், அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர்களை கொண்டே மெக்சிகோ எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவரை அமைத்துவிடலாம் என ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதேசமயம், அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால் நிலைமை மேலும் சிக்கலாகும் எனவும் ட்ரம்பிற்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close