பெற்றோர் உட்பட 5 பேரை சுட்டுக் கொன்ற இளைஞருக்கு வலை வீச்சு

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 06:29 am
us-shooting-manhunt-for-killer-who-shot-dead-5-including-own-parents

அமெரிக்காவின் லூஸியானா மாகாணத்தை சேர்ந்த 21 வயது இளைஞர், தனது பெற்றோர் உட்பட 5 பேரை சுட்டுக் கொன்று தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

லூஸியானா மாகாணத்தின் அசென்சன் பகுதியில் துப்பாகிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்று பார்த்தபோது, எலிசபெத் மற்றுக் கீத் தெரியட் ஆகிய இருவரும் குண்டடி பட்டு கிடந்ததுள்ளனர். அவர்களை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 21 வயதேயானஅவர்களின் மகன் டகோட்டா தெரியட், இருவரையும் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

அருகே உள்ள லிவிங்ஸ்டன் என்ற பகுதியில் மேலும் 3 பேரை டக்கோட்டா சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனிப்படை அமைத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close