அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் கமலா ஹாரிஸ்!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 08:16 pm
kamala-harris-kicks-of-us-presidential-campaign

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான உட்கட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்த தமிழக பூர்வீகம் கொண்ட அந்நாட்டின் செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ், தனது தேர்தல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது நாட்டு மக்களுக்கு இருக்கும் கடும் அதிருப்தியை முன்வைத்து, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்து பல்வேறு வேட்பாளர்கள் 2020 அதிபர் தேர்தலில் போட்டியிட களத்தில் குதித்துள்ளனர். ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இதுவரை 10 பேர் அறிவித்துள்ள நிலையில், இந்திய பூர்வீகம் கொண்ட கமலா ஹாரிஸ் மற்றும் துளசி கப்பார்டு ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

அமெரிக்க செனட் சபை உறுப்பினரான கமலா ஹாரிஸ், அவரது சொந்த ஊரான ஓக்லாண்ட் தொகுதியில், சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் வைத்து, அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கினார்.

அப்போது பேசிய அவர், "நமது நாடு பெரிய மாற்றத்தை சந்திக்கும் புள்ளியில் உள்ளது. நாம் இங்கு இருப்பதற்கு காரணம், அமெரிக்க கனவும், அமெரிக்க ஜனநாயகமும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. இது போல ஒரு நிகழ்வை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. நமது தலைவர்களே பத்திரிக்கை சுதந்திரத்தையும், ஜனநாயக கோட்பாடுகளையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். இது நமது அமெரிக்கா இல்லை" என்று ட்ரம்ப் அரசை விமர்சித்து காட்டமாக பேசினார்.

கமலா ஹாரிஸின் தாய், சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close