அமெரிக்க விசா மோசடி; 600 இந்திய மாணவர்கள் கைதாக வாய்ப்பு!!

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 02:23 am
hundreds-of-indian-students-could-be-arrested-over-immigration-fraud

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகங்கள் பெயரைச் சொல்லி இந்திய மாணவர்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்ததாக 8 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் கைதாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து பல்கலைக்கழகங்களில் படிப்பதாக அமெரிக்கா சென்று, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த பலரை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு துறை, ரகசிய ஆபரேஷன் ஒன்றை நடத்தியது. இதன் மூலம் 8 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலி பல்கலைக்கழகங்கள் பெயரைச் சொல்லி, இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை அமெரிக்காவுக்கு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு அமெரிக்க கூட்டமைப்பில், நூறு மாணவர்களின் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகாகோ நகரில், 29 இந்தியர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. சுமார் 600 மாணவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close