டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக களமிறங்கியுள்ள மற்றொரு பெண்!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 10:32 am
elizabeth-warren-announces-candidacy-for-us-president

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக போட்டியிட, எதிர்க்கட்சியில் இருந்து சுமார் இருபது பேர் களமிறங்கியுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எலிசபெத் வாரன், தானும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் கடும் போட்டியை சந்திக்க உள்ளார். ஏற்கனவே, அவர் மீதும், அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்து பல வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க, உட்கட்சித் தேர்தல்கள் அனைத்து மாகாணங்களிலும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, ஜனநாயக கட்சியின் பல முக்கிய புள்ளிகள் தாங்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். முக்கியமாக, இந்திய பூர்வீகம் கொண்ட கமலா ஹாரிஸ், துள்சி கப்பார்டு ஆகிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்களும் போட்டியிட உள்ளதாக தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்நிலையில், பிரபல அமெரிக்க செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே, அதிபர் தேர்தலில் போட்டியிட ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடுத்தர மக்களுக்கு நலத்திட்டங்கள், பெரு நிறுவனங்கள் மீது அதிக கட்டுப்பாடுகள், 2008ல் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பெரும் வங்கிகள் மீது நடவடிக்கை, என பல அதிரடி திட்டங்களை முன்வைத்து அதிபர் தேர்தலில் வாரன் களமிறங்கியுள்ளார். இதுவரை அறிவித்துள்ளவர்களில், வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வாரனுக்கே அதிக வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close