அணு ஆயுதத்தை கைவிடுகிறதாம் வட கொரியா!

  Padmapriya   | Last Modified : 09 Apr, 2018 09:27 pm

அணு ஆயுத பயன்பாடுகளை கைவிட தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அமெரிக்காவுடன் நடத்தப்படும் ஆலோசனையில் பேச தயாராக உள்ளதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை கைவிட அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தயாராக உள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சில உத்தரவாதங்களை தரும் பட்சத்தில், வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபரின் செய்தி தொடர்பாளர்கள், வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இருப்பதாக கூறப்படுகிறது.

ரகசிய சந்திப்பா? இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்னை மறைந்து, தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அடுத்த மாதம் சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் அதற்கான தேதி, இடம் முடிவாகவில்லை. அமெரிக்க, கொரிய பிரச்சனை இதில் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தகவல்களை தெரிவிக்காமல் இரண்டு நாடுகளும் ரகசியமாக வைத்துள்ளது. இதையடுத்து இனி அணு ஆயுத சோதனை நடந்த போவதில்லை என்று வடகொரியா தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், வடகொரியா பாதுகாப்பு அதிகாரிகள், கிம் அந்த முடிவில்தான் இருக்கிறார் என்று கூறினார்கள். இந்த இரண்டு விஷயங்களும் மக்கள் மத்தியில் கேள்விக்குறியாகத் தான் பார்க்கப்படுகிறது. தற்போது சோதனை செய்வது மட்டுமில்லாமல் அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா தயாராக உள்ளதா தெரிகிறது. இதுகுறித்து நடக்கும் பேச்சுவார்த்தைகளில் இனி புதிதாக அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது, ஆணு ஆயுத தயாரிப்பு செய்ய கூடாது என பல கட்டுப்பாடுகள் வடகொரியா மீது விதிக்கப்படும். இதற்கு முன், பலமுறை வடகொரிய தரப்பில் இருந்து அமெரிக்க அதிபர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், எந்த அதிபரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி வடகொரியா சர்வாதிகாரியை சமமாக நடத்தக் கூடாது என்பதால் அமெரிக்க அதிபர்கள் நேருக்கு நேர் சந்திப்பை தவிர்த்து வந்தனர். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ள முதல் அதிபர் ட்ரம்ப் தான்.

முன்னதாக வடகொரிய அதிபர் கிம் ''என்னுடைய மேசை மீது ஒரு அணு ஆயுத ஸ்விட்ச் பொருத்தி வைத்து இருக்கிறார்கள். அதை அழுத்தி உலகின் எந்த நாட்டை வேண்டுமானாலும் என்னால் தாக்க முடியும்'' என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்ப் ''என்னுடைய மேசையில் அதைவிட பெரிய பட்டன் இருக்கிறது. அந்த பட்டன் உங்களுடையதை விட பெரிதாக இருக்கும், அதைவிட சக்தியும் அதிகமாக இருக்கும்.'' என்று குறிப்பிட்டிருந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close