அரியவகை மீனை காப்பாற்ற அமெரிக்க விஞ்ஞானிகள் புது முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 01:05 pm
scientists-hope-dna-in-water-could-be-way-to-save-rare-fish

அமெரிக்காவில் மிக சொற்ப அளவிலேயே உள்ள ஆர்க்டிக் சார் என்னும் வகையை சார்ந்த மீன்களைக் காப்பாற்ற அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சி எடுத்து வருகின்றனர். 

மெய்ன் பகுதியை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள 14 ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள இந்த மீன்கள் புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து அழிந்து வருகின்றன. 

இதுபோன்று அழிந்துவரும் மீன்களை காப்பற்ற அந்த மீன்கள் இருக்கும் பகுதியில் நெட் அமைக்கப்படும். ஆனால் மெய்ன் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த வகை மீன்கள் வாழும் பகுதிகளில் உள்ள நீரின் டிஎன்ஏவை பயன்படுத்தி அதன் மூலமாக இவற்றை அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த பணிகள் நடந்து வருகின்றன என்றும் இதுவரை இந்த ஆய்வு வெற்றிகரமாகவே இருந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்ஏ மூலம் அந்த மீன்கள் மிகவும் பழகிய தன்மையை உருவாக்க முடியும் என்பதால் அவற்றை காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close