முடிவுக்கு வரும் அமெரிக்க எல்லை சுவர் ஒப்பந்த விவகாரம்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 03:54 pm
us-lawmakers-avert-another-federal-shutdown-reach-agreement-to-fund-trump-govt

அமெரிக்க எல்லை சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்குவது குறித்த விவகாரத்தில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் இணைந்து போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் பிரச்னை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. 

அமெரிக்காவில் சட்டவிரோதமாக அகதிகள் புலம்பெயர்வதை தடுக்கவும், போதைப்பொருள் கடத்துதலை தடுக்கவும் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் எல்லை சுவர் அமைப்பதே சிறந்த வழி என்று டிரம்ப் கூறியிருந்தார். 

ஆனால், எல்லை சுவர் அமைக்க நிதி ஒதுக்குவது தொடர்பான ஒப்பந்தம் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு நிலுவையில் உள்ளதால் 35 நாட்கள் அமெரிக்க அரசுப்பணிகள் முடங்கியது. 

எல்லை சுவர் அமைக்க நிதி ஒதுக்கும் வரை அமெரிக்க நாடாளுமன்றம் இயங்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளும்படியான பேச்சுவார்த்தை நடைபெற்றது. குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி மற்றும் நாடாளுமன்றத்தை சேர்ந்த 17 பேச்சுவார்த்தையாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

அரசு முடங்குவதை தடுக்க இரு தரப்பினரும் இணைந்து ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன்படி, அமெரிக்க எல்லை சுவர் அமைக்க நிதி ஒதுக்குவது குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், என்ன மாதிரியான அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து இதுவரை சரியாக தெரியவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் சம்மதிப்பாரா என்றும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. 

ஒருவேளை அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தரவில்லை எனில் அமெரிக்க அரசு முடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close