ஆப்பர்சுனிட்டி ரோவர் செயல்பாட்டை நிறுத்தியது- நாசா

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Feb, 2019 02:03 pm
nasa-s-mars-rover-stops-working

15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவர் செயல்பாட்டை நிறுத்தியதாக நாசா அறிவித்துள்ளது.

வெறும் 90 நாட்கள் மட்டுமே ஆயுட் காலத்தைக் கொண்ட ஆப்பர்ச்சுனிட்டி ரோவர், 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த விண்கலம் 14 ஆண்டுகளுக்கும் மேல் செயல் புரிந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. செவ்வாய் கிரகம் குறித்து பல வியப்பூட்டும் தகவல்களை அளித்து வந்த ஆப்பர்ச்சுனிட்டி ரோவர் கடந்த ஆண்டு ஜூனில் அங்கு வீசிய புழுதிப் புயலில் சேதமுற்றது.

மீண்டும் அதை செயல்படுத்த வைக்கும் பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இந்த நிலையில் ஆப்பர்ச்சுனிட்டி ரோவர் செயல்பாட்டை நிறுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close