புல்வாமா தீவிரவாதத்  தாக்குதல் சம்பவம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 10:56 am
pulwama-attack-immediately-end-support-to-terror-groups-us-to-pak

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நேற்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தீவிரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் உடனே நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புல்வாமாவில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

தீவிரவாதிகளின் சொர்க்கபூமியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இனிமேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கும் ,அமெரிக்காவுக்கும் இடையேயான  தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை இத்தாக்குதல் சம்பவம் எந்த விதத்திலும் குறைத்துவிடாது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் இரங்கல்: ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், "புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கொடூர தாக்குதலுக்கு காரணமானவர்கள், மூளையாக செயல்பட்டுள்ளவர்கள் என அனைவரும் சந்தேகத்துக்கு இடமின்றி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று புதின் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close