எல்லை சுவருக்காக அவசர நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 03:35 am
trump-declares-national-emergency-over-border-wall

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் கட்டுவதற்காக தேசிய அளவில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு எல்லையில், மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானோர் தினம் குடியேறி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். எல்லையில், பெரும் சுவர் கட்ட உள்ளதாகவும், அதற்கு மெக்சிகோ நிதி வழங்கும் என ட்ரம்ப் கூறிய நிலையில், மெக்சிகோ மறுத்ததால், தற்போது இதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் நிதி ஒதுக்க வேண்டும் எனக் கோரி வந்தார். ஆனால், ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட முடியாது என கூறி, நாடாளுமன்றம் நிதி ஒதுக்க மறுத்துவிட்டது.

எல்லை சுவருக்கு, நாடாளுமன்றம் நிதி ஒதுக்காததால், அமெரிக்க அரசின் சம்பள பட்ஜெட்டை முடக்கி, அரசு துறைகளை ட்ரம்ப் செயல்படாமல் வைத்திருந்த நிலையில், அவரது நடவடிக்கைகளின் மீது அதிருப்தி அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, தற்போது அரசு தொடர்ந்து இயங்க, புதிய பட்ஜெட்டை நாடாளுமன்றம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளது. இந்தமுறையும் சுவருக்காக அதில் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், தேசிய அளவில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி, எல்லைச் சுவர் கட்ட உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். சட்டவிரோத குடியேற்றங்கள் தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சனை, என ட்ரம்ப் கூறினாலும், அமெரிக்க ராணுவம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் என யாருமே அதை இதுவரை ஏற்கவில்லை. இந்தநிலையில், தன்னிச்சையாக தேசிய அளவில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதாக சர்ச்சைக்குரிய முறையில் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க சட்டப்படி, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டால், இந்தியாவை போல அதிபருக்கு அதீத அதிகாரங்களோ சட்ட ஒழுங்கின் மீது முழு கட்டுப்பாடோ கிடைக்காது. ஆனால், எல்லைச் சுவர் கட்டுவதற்காக, பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி, ட்ரம்ப்பால் நிதி திரட்ட முடியும்.

இதனால், ட்ர்மப்பின் இந்த முடிவுக்கு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close