புல்வாமா தாக்குதல் கொடூரமானது: அதிபர் டிரம்ப் கருத்து

  Newstm Desk   | Last Modified : 20 Feb, 2019 09:29 am
pulwama-attack-horrible-says-donald-trump

‛‛ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பாதுகாப்பு படையினர் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் பயங்கரமானது; மிகவும் கொடூரமானது’’ என, அமெரிக்க அதிபர் டொலான்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், இம்மாதம், 14ம் தேதி, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது ஜெயஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், நம் வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொலான்டு டிரம்ப், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து, அதிபர் டிரம்ப் கூறுகையில், ‛‛ இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் கொடூரமானது; அதிபயங்கரமானது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்த முழு அறிக்கையும் கிடைத்ததும், எங்கள் தரப்பு கருத்தை தெரிவிப்போம். பயங்கரவாதத்தை ஒழிப்பதில், இந்தியா, பாக்., இணைந்து செயல்பட்டால் மிக நன்றாக இருக்கும்’’ என அவர் கூறினார். 

ஏற்கனவே, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத்தை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில், இந்தியாவின் முயற்சிகளுக்கு, அமெரிக்க முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close