புல்வாமா தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கண்டன தீ்ர்மானம் நிறைவேற்றம்!

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 08:16 am
pulwama-attack-resolution-passed-in-unsc

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், "புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பையும், இத்தாக்குதலை திட்டம் வகுத்து செயல்படுத்தியவர்களையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும்" எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது..

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர் நாடுகள் அனைத்தும் இதனை  ஏற்றுகொண்டதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக, சீனாவும் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

 ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையையும், இதுதொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தையும் சீனா தொடர்ந்து நிராகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close