கிம் ஜோங் உன்-னை சந்தித்தார் ட்ரம்ப்!

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 09:35 pm
trump-meets-kim-jong-un-in-vietnam

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இடையிலான இரண்டாவது உச்சி மாநாடு, வியட்நாமில் இன்று துவங்கியது. தலைநகர் ஹனோயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் உணவருந்தி பேச்சுவார்த்தைகளை துவக்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வடகொரிய அதிபர் ஒருவரை நேரில் சந்திக்கும் முதல் அமெரிக்க அதிபரானார் ட்ரம்ப். அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை வடகொரியா நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததாக ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டாலும், வடகொரியா தனது அணு ஆயுத செயல்பாட்டை குறைக்கவில்லை, என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இரு தலைவர்களும் மீண்டும் சந்திக்க திட்டமிட்டனர். இரண்டாவது உச்சி மாநாட்டிற்காக இருவரும் வியட்நாம் வந்த நிலையில், தலைநகர் ஹனோயில் உள்ள மெட்ரோபோல் நட்சத்திர ஓட்டலில் உணவருந்தி பேச்சுவார்த்தைகளை துவக்கினர். 2 நாட்கள் நடைபெறும் உச்சிமாநாட்டில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close