ராணுவ நடவடிக்கையை நிறுத்துங்கள்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள்!

  Newstm Desk   | Last Modified : 28 Feb, 2019 09:15 am
usa-appeal-to-india-nad-pakistan

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் ராணுவ நடவடிக்கைகளை கைவிடுமாறு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மேலும் கூறும்போது, "புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின் காரணமாக,  ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இந்திய- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் சில நாள்களாக பதற்றம்  நீடித்தது வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தணிக்க, இருநாடுகளும் தங்களது ராணுவ நடவடிக்கைககளை உடனடியாக கைவிட வேண்டும். மாறாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

தீவிரவாதத்தை வேரறுப்பது தொடர்பான ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை பாகிஸ்தான் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அத்துடன் தீவிரவாதிகளுக்கு புகலிடம்  தருவதை அந்த நாடு இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதுடன், தீவிரவாத அமைப்புகளுக்கு வரும் நிதியையும் உடனே தடை செய்ய வேண்டும்" என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close