மருமகனுக்கு ரகசிய பாதுகாப்பு அனுமதி - சர்ச்சையில் ட்ரம்ப்!

  Newstm Desk   | Last Modified : 01 Mar, 2019 01:19 pm
trump-under-fire-for-ordering-top-secret-security-clearance-for-kushner

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனும், தொழிலதிபருமான ஜேரட் குஷ்னருக்கு உளவுத்துறை எச்சரிக்கையை மீறி, அந்நாட்டின் உச்சகட்ட ரகசிய பாதுகாப்பு அனுமதியை வழங்க ட்ரம்ப் உத்தரவிட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப், தனது மகள் மற்றும் மருமகனை வெள்ளை மாளிகை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். மருமகனும், தொழிலதிபருமான ஜேரட் குஷ்னர், அரசின் அடிப்படை பாதுகாப்பு விஷயங்களை தெரிந்துக்கொள்ளவே, உளவுத்துறையில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், உச்சகட்ட ரகசியங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ட்ரம்ப் அவருக்கு வழங்கியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

குஷ்னருக்கு பல்வேறு வெளிநாட்டு அரசுகளுடன் தொழில்ரீதியாக தொடர்புகள் உள்ளதால், அமெரிக்க அரசின் ரகசியங்களை தெரிந்து கொள்ள அவருக்கு தகுதி இல்லை என, அமெரிக்க உளவுத் துறை சி.ஐ.ஏ தரப்பில் இருந்து வெள்ளை மாளிகைக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

இதனால், ரகசிய பாதுகாப்பு அனுமதி அவருக்கு கிடைக்கவில்லை. அதை வழங்க ட்ரம்ப் வலியுறுத்திய நிலையில், வெள்ளை மாளிகை வழக்கறிஞர் டான் மெக்கான், குஷ்னருக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், ட்ரம்ப், அடுத்த நாளே அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

உளவுத்துறையின் எச்சரிக்கைகளை மீறி, ரகசிய பாதுகாப்பு அனுமதி நிராகரிக்கப்பட்ட தனது மருமகனுக்கு, அதை வழங்க ட்ரம்ப் உத்தரவிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் விடுத்துள்ளன. இதுதொடர்பாக நாடாளுமன்ற கமிட்டி விசாரணை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close