இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா! 

  Newstm Desk   | Last Modified : 05 Mar, 2019 07:46 am
us-intends-to-terminate-india-s-turkey-s-designations-as-beneficiary-developing-countries-america

அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறை தொடர்ந்தால், வளர்ந்துவரும் நாடுகளுக்கான சிறப்பு வர்த்தக தகுதிப் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் வர்த்தகப் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

குறிப்பாக, ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 100 சதவீதமும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் மதுபானங்களுக்கு 150 சதவீதம் வரியையும் இந்தியா விதித்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலை தொடர்ந்தால், தங்களது வர்த்தக முன்னுரிமை திட்டத்தின்கீழ், வளர்ந்து வரும் நாடுகளில் சிறப்பு வர்த்தக தகுதியை பெற்றுள்ள இந்தியா, அந்தத்  தகுதியை இழக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தன் சொல் பேச்சை கேட்காத நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிப்பதும், பிறகு தனது நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டால், அந்தப் பொருளாதாரத் தடையை தாமாகவே முன்வந்து நீக்குவதும்  அமெரிக்காவுக்கு வாடிக்கையான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close