அமெரிக்காவின் சிறப்பு வர்த்தக தகுதிப் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 07:27 am
trump-ends-preferential-trade-program-for-india

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வந்த நிலையில், அமெரிக்காவின் சிறப்பு வர்த்தக தகுதி பட்டியல் நாடுகளில் இருந்து இந்தியாவை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமெரிக்க உற்பத்தி பொருட்கள் மீது இந்தியாவில் அதிக வரி வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேசி வந்தார். ஹார்லி டேவிட்சன் பைக் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் மீது மீது இந்திய அரசு 100% வரி விதிப்பதாக ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்தார்.

இதனால் இந்திய உற்பத்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்து வந்தார். அமெரிக்காவின் சிறப்பு வர்த்தக தகுதி பட்டியல் நாடுகளில் இருந்து, இந்தியாவை நீக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், சிறப்பு வர்த்தகத் தகுதி பட்டியலில் இருப்பதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்து வரும் சுமார் ரூ.40,000 கோடி (5.6 பில்லியன் டாலர்) வரி சலுகைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 60 நாட்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close