வெள்ளை மாளிகை தொலைத்தொடர்பு இயக்குனர் ராஜினாமா

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:28 am
white-house-communications-director-resigns

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை தொலைத்தொடர்பு இயக்குனராகவும், அவரின் ஆலோசகராகவும்  பணியாற்றி வந்த பில் ஷைன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை தொலைத்தொடர்பு இயக்குனராகவும், ட்ரம்பின் நெருங்கிய ஆலோசராகவும் செயல்பட்டு வந்த பில் ஷைன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை பதவியை ராஜினாமா செய்தாலும், 2020ல் ட்ரம்ப்பின் தேர்தல் குழுவின் மூத்த ஆலோசகராக ஷைன் தொடர்ந்து செயல்படுவார் என்றும் சாரா கூறியுள்ளார். பதவி விலகுவது குறித்து ஷைன் பேசியபோது, "ட்ரம்ப் தலைமையிலான அரசில் ஒரு சிறிய பங்காற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 2020ல் தேர்தலில் பணியாற்றுவேன். எனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் கழிக்க இருக்கிறேன்" என்று கூறினார்.

வெள்ளை மாளிகையில் இருந்து இதுவரை சுமார் 400 பேர் தங்களது பதவியை ராஜினாமா அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகையின் 5வது தொலைத்தொடர்பு இயக்குனராக பில் ஷைன் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close