சீனாவுக்கு புதிய நிபந்தனை விதிக்கும் டிரம்ப்  !

  டேவிட்   | Last Modified : 10 Mar, 2019 08:45 am
new-conditions-to-china-by-trump

அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டும்தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவேன் எனவும், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் தான் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு கூடுதல் வரி விதித்தது. இதனையடுத்து, சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் கூடுதல் வரி விதித்தது.  இருப்பினும், அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். இதில் இரு நாடுகளின் வர்த்தகப் போரை நிறுத்தி வைக்கவும், ஜனவரி 1 முதல் 90 நாட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதில்லை என்றும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. 

இது குறித்து வாஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும்,  அமெரிக்காவுக்கு நன்மை அளிக்கும் என்றால் மட்டுமே, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close