அமெரிக்காவும் போயிங் விமானங்களுக்கு தடை விதித்தது !

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 07:55 am
boeing-737-max-8-stopped-in-america-too

அமெரிக்காவில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இந்தோனேஷியாவில், கடந்தாண்டு போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், 189 பேர் உயிரிழந்தனர். சில தினங்களுக்கு முன், இதே ரக விமானம், எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில், 157 பேர் பலியாகினர்.  இதனையடுத்து இந்த ரக விமானங்களின் இயக்கத்துக்கு, பிரிட்டன், இந்தியா, சிங்கப்பூர், கனடா, சீனா, எத்தியோப்பியா,  உள்ளிட்ட நாடுகள், தடை விதித்தன. 

தற்போது, அமெரிக்காவும் போயிங் ரக விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ள அதிபர் டெனால்டு டிரம்ப், அமெரிக்க மக்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close