அமெரிக்க ராணுவத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சுந்தர் பிச்சை உறுதி: டிரம்ப்

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 06:29 pm
president-donald-trump-meets-sunder-pichai-says-google-committed-to-us-military-not-china

அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே கூகுள் நிறுவனம் அதன் முழு ஒத்துழைப்பை வழங்கிடும்  என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தன்னிடம் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து  உரையைடியுள்ளார். 

சந்திப்பிற்கு பின்னர் டிரம்ப், "சுந்தர் பிச்சையுடனான சந்திப்பு மிகச்சிறப்பாக இருந்தது. அவர் கூகுள் நிறுவனத்தில் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே அந்நிறுவனம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்Hு சுந்தர் பிச்சை என்னிடம் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, சீனாவில் கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகளால் சீன அரசு மற்றும் அந்நாட்டின் ராணுவம் மட்டுமே ஆதாயமடைந்து வருவதாக அமெரிக்க தரப்பிலிருந்து அந்த நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின்னரே நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் - சுந்தர் பிச்சை சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இந்த சந்திப்பு தொடர்பாக சுந்தர் பிச்சை எந்த டீவீட்டும் இடவில்லை. அதற்கு பதிலாக, கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர், "நாங்கள் சீன ராணுவத்துடன் பணியாற்றவில்லை. அமெரிக்க அரசு மற்றும் அதன் பாதுகாப்பு அமைச்சகத்துடன் சைபர்செக்யூரிட்டி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close