உலக பத்திரிகை புகைப்பட விருது பெற்ற கலவரமான புகைப்படம் இதுதான்!

  Padmapriya   | Last Modified : 14 Apr, 2018 04:59 pm

ஜோஸ் விக்டர் சலாஸர் பல்ஸா 28 வயது இளைஞர். முதல் அல்லது இரண்டாம் டிகிரி அளவிலான தீக் காயத்தின் மையிரிழையில் உயிர் பிழைத்து தற்போதும் கலவரத்துக்கு பஞ்சம் இல்லாத வெனிசுலாவில் வாழ்ந்து வருகிறார். அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக அங்கு பெரும் கலவரம் வெடித்தது. கராக்கஸ் பகுதியொல் நடந்த மோசமான கலவரம் ஏற்பட்டது. அதிபருக்கு எதிரான போராட்டக்காரர்களை போலீஸார் தாக்குதல் நடத்தி கலைக்கப் பார்த்தனர். இதில் ஜோஸ் விக்டர் சலாஸர் பல்ஸா என்ற இளைஞர் மீது தீ பிழம்பு பற்றி கொண்டது. அவர் அதிலிருந்து மீள முடியாமல் சாலையில் ஓடியக் காட்சியை தான் வெனிசுலா புகைப்படக் கலைஞரான ரோனால்ட் ஸ்கெமிட் படம் பிடித்தார்.

விருதை பெரும் ரோனால்ட் ஸ்கெமிட்.

நெருப்பின் வீரியத்தையும் போராட்டத்தின் ஆழத்தையும் படம்பிடித்த அந்தப் புகைப்படக் கலைஞருக்கு தான் 2018-ம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட விருது கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் புகைப்படம் நிச்சயம் இதயம் பலவீணமானவர்கள் பார்க்கத் தகாதவைதான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close