இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்கப்படும்- அமெரிக்கா எச்சரிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 30 Mar, 2019 01:01 pm
us-top-brass-warn-against-punishing-unbending-india-for-buying-russia-s-s-400-missiles

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கினால், இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிபர் டெனால்டு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே ரஷ்யாவிடம் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்னை தலை தூக்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தை சற்று தூக்கி வாரிப் போட்டுள்ளது. இது அமெரிக்கா ரஷ்யா மீது உள்ள வன்புணர்வை காட்டுவதாக தெரிகின்றது.

ரஷ்யா உக்ரைன் பிரச்னை, அமெரிக்கா அரசியல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள், அணு ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகள், தனி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

இந்தியா-ரஷ்யா இடையே நட்புற நிலவுவதால், எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதார தடை சட்டத்தின் மூலம் எதிரிகளுக்கு பதிலடி என்ற நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த விழாயன்று கையெழுத்திட்டார்.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து 30 கோடி ரூபாயில் எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. அப்படி வாங்கினால் இந்தியா மீதும் கடும் பொருளாதாரத தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா  எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close