மருத்துவமனையில் ரகசிய கேமராக்கள் மூலம் 1800 பெண்களின் ஆபாச வீடியோக்கள் பதிவு! திடுக்கிடும் தகவல்..

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 01:26 pm
hidden-cameras-filmed-women-during-childbirth-miscarriages-lawsuit

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ரகசிய கேமராக்கள் மூலம் சிகிச்சைக்கு வந்த 1800 பெண்களை நிர்வாணமாக ஆபாச வீடியோ எடுத்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சான்டிகோ நகரில் 'ஷார்ப் கிராஸ்மொண்ட்' என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக பிரசவம், கருத்தடை, கருத்தரிப்பு, கருச்சிதைவு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மருத்துவமனையின் சிகிச்சை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்து, சிகிச்சை பெற வந்த பெண்களுக்கு தெரியாமல், அவர்களை ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். சுமார் 1800 பெண்களின் வீடியோக்கள் அதில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், பல பெண்கள் மயக்கமடைந்த நிலையிலும், ஒரு சிலர் பாதி மயக்க நிலையிலுமாக இருக்கின்றனர். 

இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. 

விசாரணையில் மருத்துவமனை தரப்பில், "நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காகவே இந்த கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்களும், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கின்றனரா?என்பதை கண்காணிக்கவும் தான் கேமராக்கள் பொருத்தப்பட்டது. மற்றபடி, ஆபாச வீடியோக்கள் எடுப்பது எங்களது நோக்கமல்ல" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பெண் ஒருவர் கூறும் போது, "தற்போதைய சூழ்நிலையில், ஒருவருக்கு தெரியாமல் ஆபாச வீடியோக்களை எடுத்து, அவற்றை இருப்பினும் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.சமூக வலைத்தளங்களில் விட்டுவிடுவோம் என சம்மந்தப்பட்டவருக்கு மிரட்டல் விடுக்கும் செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், இப்படி, சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு தெரியமாலே எடுத்த வீடியோக்கள் யார் கையிலாவது சிக்கினால் பெண்களின் நிலைமை என்னவாகும். எனவே, இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியுள்ளார். 

மற்றொருவர், சிகிச்சைகளை கண்காணிக்க வேண்டுமென்றால் பறந்து விரிந்த கோணத்தில் கேமராவை வைத்திருக்கலாம். ஆனால், ஆபாச வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்ற கோணத்திலே கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close