தென்மேற்கு அலாஸ்காவில் 4.7 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்

  ஸ்ரீதர்   | Last Modified : 07 Apr, 2019 03:35 pm
magnitude-4-7-earthquake-hits-near-southwest-alaska-island

தென்மேற்கு அலாஸ்காவில் 4.7 ரிக்டர் அளவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் கடந்த வாரம் 6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் சாலைகள், வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்நிலையில் இன்று மீண்டும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் அலாஸ்காவின் அய்க்தலிக் தீவிலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில், 21 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close