சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தம்: கையெழுத்தை திரும்பப்பெறுகிறது அமெரிக்கா !

  டேவிட்   | Last Modified : 28 Apr, 2019 07:37 am
donald-trump-to-withdraw-us-from-arms-trade-treaty

சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் போடப்பட்ட கையெழுத்தை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டிருந்தது.   2014-ம் ஆண்டுஅமலுக்கு வந்த இந்த ஒப்பந்தம், ட்ரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே இதில் இருந்து அமெரிக்கா விலகுவது பற்றி அவர் பரிசீலித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இண்டியானாபொலிஸ் நகரில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ட்ரம்ப் , சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.  மேலும், சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் போட்ட கையெழுத்தை திரும்பப்பெறுகிறோம் எனவும் அதிகாரப்பூர்வ நோட்டீசை அமெரிக்காவிடம் இருந்து ஐ.நா. சபை பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close