பாகிஸ்தானியர்களுக்கு இனி விசா கிடையாது - அமெரிக்கா அறிவிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 28 Apr, 2019 03:45 pm
us-imposes-sanction-on-pak-may-deny-visas-to-pakistanis

அமெரிக்காவில் விசா முடிந்து தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்ததால், இனி பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்படமாட்டாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் விசா காலம் முடிந்தும் அங்கு தங்கி இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பி வைக்கப்படுவர். இது வழக்கமான நடைமுறை தான். அப்படி திருப்பி அனுப்பப்படும் நபர்களை, சில நாடுகள் ஏற்றுக் கொள்வதில்லை.

அப்படி ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்து வருகிறது. ஏற்கனவே, இந்தப் பட்டியலில் கினியா, காம்பியா, கம்போடியா, எரித்ரியா, சியாரா, லியோன், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய 8 நாடுகள் உள்ளன. இதையடுத்து தற்போது பாகிஸ்தானும், கானாவும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதன்மூலமாக 10 நாடுகளுக்கு அமெரிக்கா விசா வழங்க தடை விதித்துள்ளது. 

சமீபத்தில், அமெரிக்காவில் விசா முடிந்து தங்கி இருந்து வந்த பாகிஸ்தானியர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியது அமெரிக்கா. ஆனால் பாகிஸ்தான் அரசு அந்த நபர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து இனிமேல் பாகிஸ்தானிலிருந்து வரும் நபர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என அமெரிக்கா தடை விதித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close