அமெரிக்க பல்கலைக்கழக்கழகத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 01 May, 2019 11:18 am
2-dead-in-us-university-campus-shooting

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில், அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில், இந்த வருடத்தின் கடைசி வேலை  நாளான நேற்று, கல்லூரி முடிந்ததும் அவசர கால மேலாண்மை குழு, ஒரு தகவலை மாணவர்களுக்கு ட்விட்ர் மூலம் அனுப்பியது. அதில், உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறுமாறு குறிப்பிடப்பட்டது. 

அதில் உடனடியாக ஓடுங்கள், மறைந்திருங்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிவிக்கப்பட்டது.  

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close