குடியிருப்பு பகுதியில் விழுந்த ஹெலிகாப்டர்: 3 பேர் உயிரிழப்பு 

  டேவிட்   | Last Modified : 02 May, 2019 08:18 am
helicopter-crash-in-hawai-3-dead

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் குடியிருப்பு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

ஹவாய் மாகாணத்தின் கயிலுவா நகரில் பல்வேறு மாகாணங்களிலும் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹோனாலுலுவில் இருந்து கயிலுவா நகருக்கு 2 பெண் சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் கயிலுவா நகரை நெருங்கியபோது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 2 பெண் சுற்றுலா பயணிகள், விமானி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். 2 பெண் சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close