விமானம் விழுந்து நொறுங்கி விபத்து : 13 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 07 May, 2019 01:01 pm
missing-las-vegas-private-jet-crashes-in-mexico-13-feared-dead

மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாதில், அதில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து  மெக்சிகோவின் மான்டிரே நகருக்கு தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில், 13 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம், கோகுய்லா வான்பகுதியில் பறந்தபோது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்நிலையில், விமானம் காணாமல் போன பகுதியில் அதிகாரிகள், ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தபோது விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த 10 பயணிகள், 2 பைலட்டுகள் உள்ளிட்டோர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close