பள்ளியில் துப்பாக்கிச்சூடு : மாணவன் பலி

  முத்துமாரி   | Last Modified : 08 May, 2019 05:18 pm
1-dead-8-wounded-in-colorado-school-shooting-2-students-in-custody

அமெரிக்க பள்ளி ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவன் பலியானான். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில் இன்று, மர்ம நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினான். இத்தாக்குதலில் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுக்கு வயது 18. மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close