அபாச்சி கார்டியன் ‌ரக அதிநவீன ஹெலிகாப்டர் இந்தியாவிடம் ஒப்படைப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 11 May, 2019 01:17 pm
air-force-gets-its-first-apache-attack-helicopter-at-boeing-plant-in-us

அமெரிக்காவிடமிருந்து முதல் அபாச்சி கார்டியன் ‌ரக அதிநவீன ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

அமெரிக்காவிடமிருந்து 22 ரக நவீன அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய இந்திய விமானப்படை  கடந்த 2015 ம் வருடம் ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி அமெரிக்காவில் உள்ள அரிசானோ மாகணத்தில் உள்ள போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து அப்பாச்சி கார்டியன் வகையின் முதல் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் போட்லா இந்த முதல் ஹெலிகாப்டரை பெற்றுக்கொண்டார். இந்த ரக ஹெலிகாப்டரில் விமானி உள்பட இரண்டு பேர் பயணம் செய்ய முடியும். மேலும் வானிலிருந்து கீழே உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் அதிநவீன வசதிகள் இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளது என்றும் மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஹெலிகாப்டர் பறக்கும் திறன் பெற்றது என்றும் போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close