பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது ஜூன் 3ஆம் தேதி வாக்கெடுப்பு !

  டேவிட்   | Last Modified : 16 May, 2019 08:10 am
brexit-agreement-on-3rd-june

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், வரும் ஜூன் மாதம்  3-ந் தேதி, பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் ஏற்கனவே 3 முறை தோல்விகளை சந்தித்துள்ளதால், தெரசா மேவின் கோரிக்கையை அடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற காலக்கெடு அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், வரும் ஜூன் மாதம்  3-ந் தேதி, பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது வாக்கெடுப்படு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்புகள் யாவும், அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டதால், நடைபெறவுள்ள வாக்கெடுப்பு தெரசா மேவுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுவும் தோல்வியை சந்தித்தால், இங்கிலாந்து, ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close