ஈரான் தங்களோடு போர் புரிய விரும்பினால் அதோடு ஈரான் முடிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மோதல் அதிகமாகி உள்ளது.
இதனிடையே, அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சுறுத்தல் எழுந்ததையடுத்து, வளைகுடா பகுதிக்கு போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே போர் நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என்றும் அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது” என்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
If Iran wants to fight, that will be the official end of Iran. Never threaten the United States again!
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2019
newstm.in