விபத்தில் சிக்கிய ஏ.வி-8 பி ஹாரியர் கடற்படை விமானம்... உயிர் தப்பிய விமானி !

  டேவிட்   | Last Modified : 22 May, 2019 08:16 am
marine-corps-av-8b-harrier-crashes

அமெரிக்காவின் கடற்படை விமானமான ஏ.வி-8 பி ஹாரியர் ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். 

ஏ.வி-8 பி ஹாரியர் அமெரிக்க கடற்படை விமானம், வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள செர்ரி பாயிண்ட் கடற்படை விமான தளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த விமானம், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு, விமானியை பத்திரமாக மீட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close