அமெரிக்கா- மிசோரி மாநிலத்தில் சூறாவளியில் சிக்கி 3 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 24 May, 2019 03:33 pm
3-dead-state-capital-battered-as-storms-rake-missouri

அமெரிக்கா நாட்டில் உள்ள மிசோரி மாநிலத்தில் பலத்த சூறாவளியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன.

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்து சூறாவளி காற்று சுழன்று அடிக்கிறது. இதனால் அங்குள்ள வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி எரியப்பட்டு ஒன்றின் ஒன்று விழுந்து சேதமடைந்துள்ளது.

இந்த சூறாவளியில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 பேர் காமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close