அமெரிக்கா: அரசு அலுவலகம் அருகே துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 10:20 am
unspeakable-senseless-violence-12-killed-suspect-dead-in-va-beach-shooting

அமெரிக்காவில் விர்ஜினியா என்ற நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் விர்ஜினியா பீச் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். அரசு அலுவலங்கள் இருக்கும் பகுதி என்பதால் இங்கு மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடப்பதை அறிந்த போலீசார், அங்கு வந்து வந்து மர்ம நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், அந்த மர்ம நபர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டால் 

இந்த சம்பவத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 

இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில், அந்த நபர் விரக்தியின் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close