வீட்டுக்குள் புகுந்த சிறிய ரக விமானம்; 3 பெண்கள் காயம் !

  டேவிட்   | Last Modified : 06 Jun, 2019 07:56 am
crash-landing-at-home-in-us

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம் வீட்டின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு  வீட்டுக்குள் புகுந்ததால், விமானியும், 3 பெண்களும் காயம் அடைந்தனர். 

கனெக்டிக் மாகாணத்தில் உள்ள டைன்பரி நகரில் பேட்டரியில் இயங்கும் கிளைடர் ரக சிறிய ரக விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பேட்டரியின் மின்சக்தி திடீரென தீர்ந்ததால், விமானத்தை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறக்கும் முயற்சியில் விமானி ஈடுபட்டார்.  ஆனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த வீடு ஒன்றின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் விமானி, வீட்டு உரிமையாளரான பெண் மற்றும் அவரது 2 மகள்கள் ஆகியோர் காயமடைந்தனர்.   வீட்டின் அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close