ஸ்மார்ட்ஃபோனை துறக்க தயாரா? அப்போ உங்களுக்கு பீட்சா ஃப்ரீ !

  கிரிதரன்   | Last Modified : 11 Jun, 2019 06:48 pm
us-restaurant-offers-free-pizzas-for-locking-phones-away-while-eating

இன்றைய ஸ்மார்ட்ஃபோன் உலகில், தூங்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா பொழுதுகளிலும் மொபைல்ஃபோனில் ஏதாவது துழாவி கொண்டிருப்பதே நம்மில் பெரும்பாலோரின்  பழக்கமாக மாறிவிட்டது. இப்படி வயது வித்தியாசமின்றி அதிகரித்துவரும் செல்ஃபோன் அடிமைத்தனத்தால், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசுவதே அரிதாகி வருகிறது.

இந்த அவலநிலையை மாற்றும் நோக்கத்தில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஃபிரஸ்னோ எனுமிடத்தில் இயங்கிவரும் பீட்ஸா விற்பனையகம், ஒரு நூதன முயற்சியை முன்னெடுத்துள்ளது.

குறைந்தபட்சம் நான்கு குடும்ப உறுப்பினர்கள் அல்லது நான்கு நண்பர்கள் தங்கள் கடைக்கு பீட்சா சாப்பிட வர வேண்டும். அப்படி வரும்போது, அவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் உள்ள ஸ்மார்ட்ஃபோன்களை லாக் செய்துவிட்டு, கடையின் லாக்கரில் வைத்துவிட வேண்டும். பீட்சா சாப்பிட்டு முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தங்கள் ஃபோனை  வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்று கொள்ளலாம். இவ்வாறு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு பீட்சா இலவசமாக வழங்கப்படும் என அந்த கடையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உறவுகளுக்கு இடையே நேரடி உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக அந்த கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close