பயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவித்து வருகிறது : அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2019 10:27 pm
iran-is-the-world-s-largest-state-sponsor-us-secretary-of-state-mike-pompeo

பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதில் ஈரானின் பங்களிப்பு அதிகம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். இந்த நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், மைக் பாம்பியோவும், டெல்லியில் செய்தியாளர்களை இன்று கூட்டாக சந்தித்தனர்.

அப்போது மைக் பாம்பியோ கூறியதாவது:
உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். அதேசமயம், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவிஅளிப்பது உள்ளிட்ட வழிகளில் அவற்றை ஊக்குவிப்பதில்,  ஈரானின் பங்களிப்பு அதிகம் என்பதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நன்கு அறியும்.

ஈரானிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு நியாயமான விலையை வழங்குவதன் மூலம், அந்நாடு பயங்கரவாத ஊக்குவிப்பு செயல்களில் ஈடுபடுவதை நாம் தடுக்க முடியும்.

ரஷியாவிடமிருந்து எஸ்.400 ரக ஏவுகணை வாங்க இந்தியா ஒப்பந்தம்  மேற்கொண்டுள்ளது இருநாடுகளுக்கு இடையேயான விஷயம். ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா விரும்பினால், அதிலும் ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று மைக் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close