அமெரிக்க விமான விபத்தில் 10 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 01 Jul, 2019 12:21 pm
10-dead-in-plane-crash-in-texas

டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ப்ளோரிடாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கு சிறிய ரக விமானம் ஒன்று விமான சிப்பந்திகள் உள்பட 10 பேருடன் புறப்பட்டது.

ஓடுபாதையில் விமானம் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகே இருந்த கட்டடத்தின் மீது மோதியது.

இதனால் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் விமான சிப்பந்திகள் 2 பேர் உள்பட 10 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தால் ஒரு ஹெலிகாப்டரும் சேதமடைந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close