உலகம் - ஏப்.25, 2018 - தெறிப்புச் செய்திகள்

  Padmapriya   | Last Modified : 26 Apr, 2018 07:16 pm

சார்க் மாநாட்டை புறக்கணிக்க இந்தியா முடிவு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணுத்திட்டம் குறித்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் புதிய ஒப்பந்தம் ஈரான் அணுத்திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம் ஏற்படலாம், என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளனர். இதற்கு ஈரான் கடுமையான எதிர்ப்பும் கண்டிப்பும் தெரிவித்துள்ளது.

வங்கதேசம் - இந்தியா பஸ் போக்குவரத்து வங்கதேசம் - இந்தியா - நேபாளம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில், பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா - பெட்ரோல் கிணறு தீபிடித்த விபத்தில் 18 பேர் பலி இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட பெட்ரோல் கிணறு தீப்பிடித்த விபத்தில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஊழல் வழக்கில் சிக்கிய இந்தோனேசிய முன்னாள் சபாநாயகருக்கு 15 ஆண்டு சிறை இந்தோனேசிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருந்தவர் செட்யா நொவான்டா. இவர் கோல்கர் கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். சபாநாயகராக இருந்த காலத்தில் பொதுமக்கள் பணத்தில் ரூ.1,130 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக அவர் உள்ளிட்ட 80 பேர் மீது வழக்கு நடக்கு வந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close