பசுபிக் பெருங்கடலில் 11 ஆயிரம் கிலோ கொக்ரைன் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2019 11:11 am
11-000-kg-of-cochrane-confiscated-in-pacific-ocean

பசிபிக் பெருங்கடல் வழியாக கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்புடைய போதை பொருட்களை அமெரிக்க கடலோர காவல் படையினர் விரட்டி சென்று பறிமுதல் செய்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக பசுபிக் பெருங்கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சாண்டியாகோ பகுதியை ஒட்டியுள்ள கடல் பகுதியில் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட படகு ஒன்று அதிவேகமாக சென்றது. இதை கண்டு சந்தேகமடைந்த அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் அதிவிரைவுப்படகு மூலம் பின் தொடர்ந்தனர். 

கடலோர காவல்படையினர் வருவதை கண்ட அந்த படகு நிற்காமல் மேலும் வேகமாக சென்றதால், சந்தேகமடைந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர் வரவழைத்து பின்தொடர்ந்தனர். இதையடுத்து அந்த படகில் சென்றவர்கள் பெரிய பண்டில்களை கடலில் தூக்கி எரிந்தனர். இருப்பினும் அதிகாரிகள் விரட்டி சென்று வளைத்து பிடித்து படகை சோதனை செய்தனர். 

அப்போது, சுமார் 11 ஆயிரம் கிலோ கொக்ரைன் போதைப்பொருள் படகில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதேபோல், கடந்த 9 ஆம் தேதி கப்பல் மூலம் கடத்த முயன்ற 20 டன் போதை பொருட்கள் அமெரிக்க காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடந்த  13 ஆம் தேதி 4 ஆயிரம் கோடி மதிப்புடைய 18 டன் போதை பொருட்கள் நீர்மூழ்கி கப்பல் மூலம் கடத்த முயன்றபோது, கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

கடந்த 2 வாரங்களில் மட்டும் பசிபிக் பெருங்கடல் வழியாக கடத்த முயன்ற சுமார் 17 ஆயிரம் கோடி மதிப்புடைய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close