காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 11:02 am
trump-reiterates-kashmir-mediation-offer

இரு நாட்டுத் தலைவர்களும் விரும்பினால், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சந்திப்பில், காஷ்மீர் விவகாரத்தில் தம்மை மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் மறுப்பு தெரிவித்திருந்தார். 

இதையடுத்து சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இதன்பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களான மோடியும், இம்ரான் கானும் மிகச்சிறந்த தலைவர்கள். காஷ்மீர் பிரச்னையை தீர்த்துக்கொள்வது அவர்களது கையில் உள்ளது. மேலும் அவர்கள் விரும்பும்பட்சத்தில் மத்தியஸ்தம் செய்து உதவ நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close