அமெரிக்காவில் 'அம்மா' உணவகம்: 1 இட்லி விலை 1 டாலர் மட்டுமே!

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 04:17 pm
amma-canteen-at-america

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், 'அம்மா உணவகம்' என்ற பெயரில், மலிவான விலையில், தரமான உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறார். 

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் தினேஷ், ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் பணியாற்றினார். சிறு வயது முதலே, அதிமுக அபிமானியான அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 

அவர் உத்தரவின் பெயரில் நிறுவப்பட்ட அம்மா உணவகத்தில் குறைந்த விலைக்கு தரமான உணவுகள் விற்கப்படுவதை கண்டு வியப்படைந்தார். தானும் இதுபோல் செய்ய வேண்டும் என எண்ணிய அவர், அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் அம்மா உணவகம் என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை துவங்கி அதை நடத்தி வருகிறார். அதில் ஒரு இட்லி 1 டாலருக்கும், மேலும் பல உணவுகள் குறைந்த விலையிலும் விற்பனை செய்கிறார். 

newstm.in

  

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close