காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு 

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2019 07:58 pm
america-supports-india-on-kashmir-issue

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. தவிர காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை றது செய்தது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. 

அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பெர், நம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசியதாவது: "காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையால் அங்கு பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் நடவடிக்கைகளால் அங்கு அமைதி நிலவுகிறது. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். காஸ்மீர் விவகாரத்தில் எழும் பிரச்னைகளை, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பேசி தீர்க்க வேண்டும். அது இரு நாடுகளிடையிலான விவகாரம்'' என அவர் கருத்து தெரிவித்தார். 

இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்குக்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close